கிரிக்கெட்

பும்ரா திருமணம் செய்ய போவது இவரையா? புகைப்படம் வைரல்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகிய பும்ராவுக்கு விரைவில் திருமணம் என்று செய்திகள் கசிந்து வருகிறது என்பதும் அவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் என்பவரை திருமணம் செய்ய போவதாகவும் வதந்தி கிளம்பியது என்பதும் தெரிந்ததே.

ஆனால் அனுபமா பரமேஸ்வரன் தாயார் இந்த செய்தியை மறுத்தார் என்பதும் அவர் படப்பிடிப்புக்காக வட இந்தியாவுக்குச் சென்றதாகவும் திருமணம் இப்போது இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பும்ரா திருமணம் செய்யப்போவது யாரை? என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் சஞ்சனா கணேசன் என்பவரை தான் பும்ரா திருமணம் செய்யப்போவதாகவும் வரும் 14 அல்லது 15 ஆம் தேதி கோவாவில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் ஆகிய இரு தரப்பில் இருந்து இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை என்றாலும் இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பும்ரா மற்றும் சஞ்சனா சிங் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version