கிரிக்கெட்

மாலத்தீவுக்கு ஹனிமூன் போங்க: ஐபிஎல் அணி கொடுத்த ஐடியா!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு நேற்று கோவாவில் சஞ்சனா கனேசன் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது என்று வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்.

காதல் திருமணமாக இருந்தாலும் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விரைவில் மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த பும்ரா திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பும்ராவின் திருமண புகைபடங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஏப்ரல் மே மாதத்தில் ஹனிமூன் கொண்டாட செல்ல சிறந்த இடம் மாலத்தீவு தான் என்று நாங்கள் கருதுகிறோம் என்று பதிவு செய்துள்ளது.

இதனை அடுத்து பும்ரா மாலத்தீவுக்கு ஹனிமூன் செல்வாரா? அல்லது வெளிநாடு செல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே தமிழ் திரைப்பட நடிகைகள் பலர் சமீபத்தில்தான் மாலத்தீவுக்கு சென்று வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version