கிரிக்கெட்

பும்ராவுக்கும் இந்த தமிழ் நடிகைக்கும் திருமணமா?

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும் தமிழ் நடிகை ஒருவருக்கும் காதல் என்றும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இன்று தொடங்கியுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. மேலும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாட மாட்டார் என தெரிகிறது.

பும்ராவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதால் அவர் சில மாதங்கள் விடுமுறை எடுத்துள்ளதாகவும் இருப்பினும் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பும்ரா யாரை திருமணம் செய்த போகிறார் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது.

பும்ராவுக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் காதல் என்றும் செய்தி பரவி வரும் நிலையில் பும்ரா அவரைத்தான் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இனிய விடுமுறை எனக்கு’ என்று பதிவு செய்துள்ளதை அடுத்து பும்ராவை அனுபமா திருமணம் செய்யப் போகிறார் என்று கூறப்படுகிறது

தனுஷ் நடித்த ’கொடி’ என்ற திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்து இருந்தார் என்பதும் தற்போது அதர்வா நடித்து வரும் ’தள்ளிப்போகாதே’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version