தமிழ்நாடு

சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம், பார்வையாளர்கள் வியப்பு!

Published

on

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனாருக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை குதிரை எடுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.இந்தாண்டு கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய விழா 9ம் தேதி நிறைவடைந்தது. குதிரை எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் ஏ.விளாக்குளம் அரசு பள்ளியில் இருந்து மானாமதுரை அரசு மருத்துவமனை வரை நடந்தது.பெரிய மாட்டு வண்டிக்கு 8 கி.மீ துரமும் சிறிய மாட்டு வண்டிக்கு 5 கி.மீ துரமும் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. பெரிய மாட்டு வண்டியில் ஆறு வண்டிகளும், சிறிய மாட்டு வண்டியில் 13 வண்டிகளும் போட்டியில் பங்கேற்றன.பெரிய மாட்டு வண்டியில் ஆட்டுகுளம் அழகர்மலையான் ரத்தினம் வண்டி முதலிடமும், சிறிய மாட்டுவண்டியில் பாண்டி கோயில் பாண்டியராஜன் வண்டி முதலிடமும் பிடித்தன.

வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும், காளைகளுக்கும், சாரதிக்கும் தனித்தனியே ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற வண்டி காளைகளுக்கு வேட்டி, துண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஏ.விளாக்குளம் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

Trending

Exit mobile version