தமிழ்நாடு

பட்ஜெட் மீது இன்று முதல் விவாதம்: முதல்வர் பதிலளிப்பது எப்போது?

Published

on

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கடந்த 13ஆம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தர் என்பதும் இந்த பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் வெளியானது என்பதும் பொதுமக்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அடுத்த நாள் சனிக்கிழமை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழக சட்டமன்ற வரலாற்றில் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்வது இப்போதுதான் முதல் முறை என்பதும் அதேபோல் சட்டமன்றத்தில் முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அடுத்த கட்டமாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும் அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்கள் நடைபெறும் பட்ஜெட் விவாதத்தின் கடைசி நாளான ஆகஸ்ட் 19-ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேச உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று சட்டசபை கூட்டத்தொடர் மீண்டும் கூட உள்ளதை அடுத்து சட்டசபை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version