வணிகம்

பட்ஜெட் 2024-25: வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்புக முழு விவரம்!

Published

on

பட்ஜெட் 2024-25ல், தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும் வரிச் சுமையைக் குறைக்கவும், நிதி பாதுகாப்பை அதிகரிக்கவும் பல்வேறு வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய அம்சங்கள்:

புதிய வரி முறையில் மாற்றங்கள்

  • புதிய வரி விகிதத்தை தேர்வு செய்யும் தனிநபர்களுக்கு நிலைக்கழிவு ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படுகிறது
  • அடிப்படை வருமானம் ரூ.3 லட்சம் வரை பூஜ்ய சதவீதம் என்ற விகிதம் மாற்றமின்றி தொடரும்
  • ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வரையும்
  • ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சத்திற்கு மேல் உள்ள வருமானத்திற்கு 30 சதவீதம் என வரி விதிக்கப்படுகிறது.
  • இது புதிய வருமான வரி முறையை தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும

அதிகரிக்கப்பட்ட நிலையான விலக்கு:

ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிலையான விலக்கு ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டது.

அதிகரிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதிய விலக்கு:

குடும்ப ஓய்வூதியத்திற்கான விலக்கு ரூ.15,000 இல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது.

NPS பங்களிப்புகளுக்கான வரிச் சலுகை:

தனியார் நிறுவன ஊழியர்களுக்கான NPS பங்களிப்புகளுக்கான வரிச் சலுகை 10% இல் இருந்து 14% வரை உயர்த்தப்பட்டது.

பயன்கள்:

இந்த வரிச் சலுகைகள் உங்கள் வரிச் சுமையைக் குறைக்க உதவும்.
உங்கள் சேமிப்புகளை அதிகரிக்கவும், ஓய்வுகால நிதி பாதுகாப்பை மேம்படுத்தவும் இவை உதவும்.

மற்ற வரிச் சலுகைகள்:

புற்றுநோயாளிகளுக்கு சில மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு.
பெண்கள் சொத்து வாங்குவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் மாநில அரசுகளுக்கு முத்திரைத்தீர்வை குறைக்க ஊக்குவிப்பு.
வேளாண்மை, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கான வரிச் சலுகைகள்.

author avatar
Tamilarasu

Trending

Exit mobile version