வணிகம்

500 வந்தே பாரத் ரயில்கள்.. 35 ஹைட்ரஜன் ரயில்கள்.. நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிப்பு?

Published

on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பதும் இந்த அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் அதிகப்படியான சலுகைகள் இருக்கும் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு வந்தே பாரத் ரயில்களில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என்பதும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

சென்னை – மைசூர் ரயில் உள்பட பல வந்தே பாரத ரயில்களுக்கு பயணிகளின் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளதால் இன்னும் அதிக அளவிலான வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் வரும் ஒன்றாம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் சுமார் 500 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 35 ஹைட்ரஜன் ரயில்களுக்கான அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி ஊடகம் ஒன்றின் கூற்றின்படி இந்த பட்ஜெட்டில் 35 ஹைட்ரஜன் ரயில்கள் அமைப்பதற்காக தொகை ஒதுக்கப்படும் என்றும் அதேபோல் நாடு முழுவதும் 400 முதல் 500 வந்தே பாரத் ரயில்கள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் 4000 புதிய ஆட்டோமொபைல் கேரியர் பெட்டிகள் மற்றும் 58,000 வேகன் ரயில்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவை அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இயங்கும் வகையில் அறிவிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ரயில்வேக்கு 1.9 லட்சம் கோடி நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரயில்வே துறைக்கு நிதி அமைச்சர் 1.9 லட்சம் கோடியை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரயில் பாதையை மேம்படுத்துதல், ரயில் பெட்டிகளை நவீனம் ஆக்குதல், மின்மயம் ஆக்குதல் உள்பட பல்வேறு வசதிகள் ரயில்வே துறைக்கு செய்து கொடுத்த நிதி ஒதுக்கப்படும் என்றும் குறிப்பாக 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றம் போன்ற இலக்கை அடைய இந்தியா விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் ரயில்வே துறையில் சம்பந்தமான அறிவிப்புகள் அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைவேறும் வகையில் திட்டமிடப்படலாம் என்றும் வரவு செலவுத் திட்டங்களில் அதிகபட்சமாக சுமார் 2.7 லட்சம் கோடி ரூபாய் ரயில்வே துறைக்காக ஒதுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version