இந்தியா

பட்ஜெட் 2022: அடுத்த நிதியாண்டில் இ-பாஸ்பார்ட்.. மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

Published

on

இன்று 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர இருக்கும் நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்து இருந்தார்.

இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?

தற்போது உள்ள பாஸ்போர்ட் உடன் சேர்த்து அதன் உரையில் எலக்ட்ரானிக் சிப் ஒன்று பொருத்தப்பட்டு இருப்பது தான் இ-பாஸ்போர்ட். சில நேரங்களில் தற்போது உள்ள பாஸ்போர்ட்டை சரி பார்க்கும் போது மென்பொருளில் ஏற்படும் குளறுபடிகள் அதில் இருக்காது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இ-பாஸ்போர்ட்டில் இருக்கும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இ-பாஸ்போர்ட்டில் டிஜிட்டல் கையொப்பம் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அதனுடன் எலக்டானிக் சிப் பொருத்தப்படும் என கூறப்படுகிறது. இதை பற்றி பட்ஜெட் உரையில் பேசிய நிர்மலா சீதாராமன், “சுதந்திர இந்தியாவுக்கு 100 வயதாகும் போது, இந்தியாவின் 50 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் இருப்பார்கள். இதற்குத் தயாராவதற்கு, ஒழுங்கான நகர்ப்புற வளர்ச்சி மிகவும் முக்கியமானது. இது நாட்டின் பொருளாதார திறன், வாழ்வாதாரம், மக்கள்தொகை ஈவுத்தொகை உள்ளிட்ட வாய்ப்புகளை உணர உதவும்.” என கூறினார்.

மேலும் நகர்ப்புறங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க பேட்டரி ஸ்வாப்பிங் கொள்கையைக் கொண்டு வரப்படும். அதில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பது, அதற்கான நிலையான பேட்டரி வடிவத்தை அறிமுகம் செய்வது போன்றவையும் அடங்கும்.

நகர்ப்புறங்களில் போக்குவரத்தை மேம்படுத்த நிர்மலா சீதாராமன் கூறியதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய மற்றொரு சிறப்பம்சம் பூஜ்ஜிய புதை படிவ எரிபொருள் கொள்கை மற்றும் சிறப்பு இயக்கம் மண்டலம் அமைப்பதும், அதற்காக முதலில் பெங்களூரூவைத் தேர்வு செய்துள்ளதும் ஆகும்.

இந்தியாவில் அதிகளவில் தனிநபர் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் பெங்களூரு வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

Read More: Budget Highlights in Tamil

author avatar
seithichurul

Trending

Exit mobile version