இந்தியா

பட்ஜெட் 2022: வருமான வரியில் உங்களுக்குக் கிடைத்த சிறு நன்மைகள் என்ன தெரியுமா?

Published

on

2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி விலக்கு போன்ற எந்த நன்மைகளையும் அறிவிக்கவில்லை. இது நடுத்தர மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனல் சிறு நன்மைகள் கிடைத்துள்ளன.

கோவிட்-19 தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகிறனர். வீட்டிலிருந்து வேலை பார்த்து வருவதால் பயண படி, நேரம் போன்றவை ஊழியர்களுக்கு மிச்சம் என்றாலும், வீட்டில் அலுவலகம் போன்ற நாற்காலிகள், மேஜைகள் போன்றவற்றுக்கு ஊழியர்கள் செலவு செய்தனர்.

சில நிறுவனங்கள் இது போன்ற மேஜைகள் மற்றும் நாற்காலிகள் ஊழியர்கள் வாங்கியிருந்தால் அதற்கான பணத்தை ரசீதுகளைப் பெற்றுத் திருப்பி வழங்கினர். இந்நிலையில் இதுபோன்ற செலவுகளுக்கு எல்லாம் வருமான வரி விலக்கு கிடைத்தால் நல்லதாக இருக்கும் என ஊழியர்கள் கருதினர். மேலும் சம்பாதிக்கும் பணத்தில் 30 சதவீதத்திற்கும் மேலமாக நேரடி வரி மற்றும் மறைமுக வரியாகவே செல்கிறது எனவும் நடுத்தர குடும்பத்தினர் கூறி வந்தனர்.

இருந்தாலும் வரி விலக்கு போன்ற எந்த அறிவிப்பையும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை. ஆனால் புதிய வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளது. அதை சரி செய்து மேபடுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்த போது தவறு செய்து இருந்தால், அதை திருத்தி வருமான வரி தக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மட்டும் 2 ஆண்டுகளாக உயர்த்தி அறிவித்துள்ளனர்.

மேலும் கிர்ப்டோ கரன்சிகளில் முதலீடு செய்பவர்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் நபர்களுக்கு அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் 30 சதவீதத்தை வரியாகச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் வழியாக இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வது சடப்பூர்வமாக செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விரைவில் ஆர்பிஐ தலைமையில் இந்தியாவின் டிஜிட்டல் கரன்ஸி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அதுவும் அந்த டிஜிட்டல் கரன்சி கிர்ப்டோகரன்ஸிகளில் பயன்படுத்தும் பிள்காக் செயின் தொழில்நுட்பமே இதிலும் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த கிரிப்டோகரன்சி வருமான வரியால் பாதுகாப்பான முதலீடுகளை செய்ய விரும்பும் வருமான வரி செலுத்துனர்களுக்கு எந்த பயனும் இல்லை.

seithichurul

Trending

Exit mobile version