இந்தியா

அரசுக்கு வருமானம் 1 ரூபாய் வந்தால் 58 பைசா வரி வருவாயா? அதிர்ச்சி தகவல்கள்!

Published

on

ஒன்றிய அரசுக்கு 1 ரூபாய் வருமானமாக வந்தால் அதில் 58 பைசா வருமான வரி, ஜிஎஸ்டி, செஸ் உள்ளிட்ட பிற மறைமுக வரி மூலம் கிடைக்கிறது. 35 பைசா கடன்கள் மற்றும் பிற பொறுப்புகளில் இருந்து வருகிறது. 5 பைசா வரி இல்லா வருவாய், அதாவது அரசு நிறுவனங்களை விற்பது மற்றும் பிற கடன் இல்லா முதலீடுகள் மூலம் வருகிறது என 2022-2023 பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், அரசுக்கு வரும் 1 ரூபாய் வருவாயில் 16 பைசா ஜிஎஸ்டி மூலம் வருகிறது. 15 பைசா நகராட்சி வரி மூலம் வருகிறது.

7 பைசா ஒன்றிய அரசி கலால் வரி மூலமாகவும், 5 பைசா சுங்க வரி மூலமாகவும், 15 பைசா வருமான வரி மூலமாகவும் அரசுக்கு கிடைக்கிறது.

அரசுக்கு வரும் 1 ரூபாய் வருமானம் எப்படி செலவு செய்யப்படுகிறது?

அரசுக்கு வரும் வருமானத்தில் பெரும் பகுதியாக 20 பைசா வட்டி செலுத்த மட்டும் பயன்படுகிறது. 17 பைசா மாநிலங்களுக்கான வரி பகிராக வழங்கப்படுகிறது. 8 பைசா பாதுகாப்புத் துறைக்குச் செலவு செய்யப்படுகிறது.

அரசுக்கு வரும் 1 ரூபாய் வருமானத்தில் 15 பைசா மத்திய அரசின் துறை திட்டங்களுக்கும், 9 பைசா மத்திய நிதியுதவி திட்டங்களுக்கும் செலவு செய்யப்படுகிறது. ‘நிதி ஆணைக்குழு மற்றும் பிற பரிவர்த்தனைகளுக்கு’ 10 பைசா செலவு செய்யப்படுகிறது.

மானியத்திற்கு 8 பைசாவும் ஓய்வூதியத்துக்கு 4 பைசாவும் மத்திய அரசுக்கு வரும் 1 ரூபாய் வருமானம் செலவு செய்யப்படுகிறது.

பிற செலவுகளுக்கு 9 பைசா செலவு செய்யப்படுவதாகவும் பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவே 2019-ம் மத்திய அரசுக்குக் கிடைக்கும் ஒரு ரூபாய் வருமானத்தில் வரி வருவாய் பங்கு 68 பைசாவாக இருந்தது.

seithichurul

Trending

Exit mobile version