இந்தியா

கோவிட்-19 தொற்றால் பட்ஜெட்டில் எந்த மாதிரி தாக்கம் ஏற்பட்டது: நிர்மலா சீதாராமன் விளக்கம்

Published

on

மத்திய பட்ஜெட் 2021-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய ஆரம்பித்தார். அவர் தனது உரையில் முதலாவதாக கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அதனால் பட்ஜெட் தயாரிப்பில் இருந்த சவால்கள் குறித்தும் விளக்கிறார்.

நிர்மலா சீதாராமன் தன் உரையில்,

‘இந்த ஆண்டுக்கான பட்ஜெட் என்பது முன்னெப்போதும் இல்லாத வகையிலான சூழலில் தயாரிக்கப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாம் கஷ்டபட்டது மிக அதிகம்.

சென்ற ஆண்டு மே மாதம், மத்திய அரசு, ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தை அறவித்தது. அதைத் தொடர்ந்தும் நாட்டின் பொருளாதாரம் நல்ல வகையில் முன்னேற வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்த ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் நிதித் தொகுப்புகள் அறிவிக்கப்பட்டன. அப்படி அறிவிக்கப்பட்ட நிதித் தொகுப்புகளின் கீழ், சுமார் 27.1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி-யில் 30 சதவீதம் ஆகும்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவிடம் இரண்டு தடுப்பூசிகள் இருக்கின்றன. வரும் காலத்தில் மேலும் இரண்டு தடுப்பூசிகள் நம் கைகளில் கிடைக்கும். இந்த தடுப்பூசி, இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு தன் உரையின் ஆரம்பத்தில் கூறியுள்ளார் நிதி அமைச்சர்.

seithichurul

Trending

Exit mobile version