இந்தியா

பட்ஜெட் 2021: சுகாதாரத் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்!

Published

on

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2021ல், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுகாதாரத் துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாயின.

அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவுப்புகள் இதோ:

1.கொரோனா தொற்றை சமாளிக்க நாம் இரண்டு தடுப்பூசிகளைப் பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதித்துள்ளோம். இன்னும் இரண்டு தடுப்பூசிகள் சீக்கிரமே பயன்பாட்டுக்கு வரும். நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்னும் காரணத்திற்காக, இந்த ஆண்டு பட்ஜெட்டில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

2.நாட்டின் மொத்த சுகாதார செலவுகளுக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3.பிரதம மந்திரி ஆத்மநிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா திட்டத்தில் அடுத்த 6 ஆண்டுகளில் 64,180 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

 

 

seithichurul

Trending

Exit mobile version