இந்தியா

‘சென்னை மெட்ரோ, தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம்’ – பட்ஜெட் 2021ல் தமிழகத்துக்கான சிறப்பு அறிவிப்புகள்!

Published

on

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2021ல், தமிழகத்துக்கு எந்த மாதிரியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாயின.

அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவுப்புகள் இதோ:

1.சென்னையில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

2.மதுரையில் – கொல்லம் இடையே நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

3.தமிழகத்தில் 3,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைப் பணிகளுக்கு 1.03 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4.தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை ஒருங்கிணைக்கும் வகையில் சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version