Connect with us

இந்தியா

மத்திய பட்ஜெட் 2021 – 21 | Highlights

Published

on

தேயிலை தோட்ட தொழிலாளர் நலனுக்கு ரூ.1,000 கோடி

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடியில் புதிய திட்டம் அறிவிப்பு

வீட்டுக்கடன் வட்டி வரிச்சலுகை நீட்டிப்பு

குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

வாடகைக்காக வீடுகளை கட்டும் நிறுவனங்களுக்கு சலுகை

வாடகைக்காக வீடுகளை கட்டும் நிறுவனங்கள்உக்கு சலுகை வழங்க திட்டம் அறிவிப்பு

75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வருமான வரியில் விலக்கு

வங்கி வட்டி, ஓய்வூதியத்தை நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்படோர் வருமான வரி செலுத்த தேவையில்லை. வருமான வரி கணக்கையும் தாக்கல் செய்ய தேவையில்லை. நாடு முழுவதும் 6.48 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – ரூ.3,765 கோடி ஒதுக்கீடு

நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை டிஜிட்டல் முறையில் செய்ய ரூ.3,765 கோடி ஒதுக்கீடு. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டிற்கு ரூ.1,500 கோடி, சூரிய ஆற்றல் கழகத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

ரூ.12 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்

அடுத்த 2 மாதங்களில் ரூ.85,000 கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, 2021-22ம் ஆண்டில் ரூ.12 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டம். அடுத்த நிதி ஆண்டி நிதி பற்றாக்குறை 6.8%ஆக குறையும்

100 சைனிக் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்

இந்தியா முழுவதும் 100 சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும்; 15,000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்

சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி

சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்பட்டும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடல்பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும்.

எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு

எல்.ஐ.சி. பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்க முடிவு. பொதுமக்களுக்கு பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்றும் அறிவிப்பு. நடப்பு ஆண்டில் மேலும் 2 அரசு வங்கிகளை தனியார் மயமாக்கவும் முடிவு

வங்கிகளுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு

அரசு வங்கிகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – மத்திய அரசு

வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் தொடரும்

அரசின் தானிய கொள்முதல் மூலம் ஓராண்இல் ஒன்றரை கோடி கூடுதல் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.  விளை பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை ஒன்றரை மடங்கு அதிகரிப்பு – நிர்மலா சீதாராமன்

நடப்பு ஆண்டில் ரூ.1.72 லட்சம் கோடி மதிப்பில் விவசாய விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.16.5 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு துறையில் 74% நேரடி அல் ந்நிய முதலீடு

காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீடு 49%-லிருந்து 74%ஆக அதிகரிப்பு

மின் விநியோகத்தில் தனியாருக்கு முக்கியத்துவம்

மின் உற்பத்தி மற்றும் விநியோகிக்கும் நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக ரூ.3 லட்சம் கோடியில் புதிய திட்டம்.

மேலும் ஒரு கோடி பேருக்கு இலவச கேஸ் சிலிண்டர்

உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதுவரை 8 கோடி பேருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் 100 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்

சென்னை மெட்ரோவுக்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு

சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு. சென்னையில் 118 கி.மீ. தொலைவுக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். பெரு நகரங்களை தொடர்ந்து சிறுநகரங்களிலும் குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

46,000 கி.மீ. ரயில் பாதை மின்மயமாக்கப்படும்

நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023 டிசம்பருக்குள் மின்மயமாக்கப்படும்.ஏற்கெனவே 41,000 கி.மீ. தூர ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 46,000 கி.மீ. ரயில் பாதை மின்மயமாக்கப்படும்

தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு முக்கியத்துவம்

தேர்தல் நடக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்துள்ளது மத்திய அரசு

500 நகரங்களில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.2.87 லட்சம் கோடி ஒதுக்கீடு. அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி செலவிடப்படும் – கொரோனா தடுப்பூசிக்காக தேவைப்பட்டால் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

20 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட தனியார் வாகனங்கள், 15 ஆண்டுகள் வர்த்தக வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

நகர்ப்புற தூய்மை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1,47,678 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ஜவுளித்துறையில் அன்னிய முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

 

கட்ட மேம்பாட்டிற்கு ரூ.5 லட்சம் கோடி

அடிப்படை கட்ட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டம் ரூ.5 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படும்.. நாடு முழுவதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 7,400 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 7 இடங்களில் மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன்

மண்டல அளவில் வைரஸ் ஆராய்ச்சி மையம்

இந்தியா முழுவதும் மண்டல அளவில் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்படும் – சுகாதாரத்திற்கான செலவினம் 137% அதிகரிப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் 3,500 கி.மீ-க்கு புதிய சாலை

தமிழ்நாட்டில் மதுரை – கொல்லைம் இடையே புதிய பொருளாதார சாலை அமைக்கப்படும். தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் மேம்படுத்தப்படும். இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்

ஜோதிடம்52 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!