இந்தியா

வெளிநாட்டு பங்குகளையும் இனி இந்தியாவில் இருந்தே வாங்கலாம்: அதிரடி அறிவிப்பு!

Published

on

இந்தியாவில் தற்போது மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பங்கு சந்தை உள்பட பல பங்கு வர்த்தக அமைப்பு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை மட்டுமே தற்போது மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின் மூலம் இந்தியர்கள் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் விரைவில் வெளிநாட்டிலுள்ள பங்குகளையும் வாங்குவதற்கான வசதிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையின் அதிகாரிகள் கூறியபோது வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஐரோப்பிய, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் இந்தியர்களின் வர்த்தகம் செய்யலாம் என்ற வசதி கூடிய விரைவில் வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

முதல்கட்டமாக உலகிலுள்ள 130 பங்குசந்தைகளில் இந்தியாவிலிருந்து வர்த்தகம் செய்யலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் இந்தியர்களின் பங்கு சந்தை விரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version