சினிமா செய்திகள்

ப்ரூஸ் லீ நினைவு தினம்: தமிழ் ரசிகர்கள் அஞ்சலி!

Published

on

தற்காப்புக் கலை வீரரும் ஹாலிவுட் நடிகருமான ப்ரூஸ் லீ நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்களும் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உலகின் மிகப் புகழ்வாய்ந்த குங்ஃபூ என்ற தற்காப்பு கலையை கலைஞரான ப்ரூஸ் லீ, ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார். என்டர் தி ட்ரேகன், பிஸ்ட் ஆஃப் பியூரி உள்பட பல திரைப்படங்கள் உலகம் முழுவதும் சக்கை போடு போட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 1973-ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி தனது 32 வயதில் மர்மமான முறையில் ப்ரூஸ் லீ மரணம் அடைந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாகவும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளி வந்தாலும் அவரது மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரூஸ் லீ ஹாங்காங்கில் பிறந்திருந்தாலும் உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர் என்பதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹாங்காங்கில் அவருக்கு பிரமாண்டமான வெண்கல சிலை வைத்து ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ப்ரூஸ் லீ நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதை அடுத்து உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் அவரது புகைப்படத்திற்கு மாலை மரியாதை செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரூஸ் லீ அவர்கள் காலமாகி 48 வருடங்கள் ஆகிவிட்ட பின்னரும் இன்னமும் அவரது ரசிகர்கள் அவரை நினைவில் வைத்து நினைவு நாளில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version