சினிமா

இது சரவெடி கலாட்டா!.. மோகன்லால் – பிருத்திவிராஜ் கலக்கும் ‘புரோ டாடி’ டிரெய்லர்..

Published

on

மலையாளத்தில் மோகனாலும், பிரித்திவிராஜும் இணைந்து புரோ டாடி என்கிற படத்தில் நடித்துள்ளனர். லூசிஃபர் படத்திற்கு பின் இவர்கள் இருவரும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

இப்படத்தில் மோகன்லால் அப்பாவாகவும், பிரித்திவிராஜ் மகனாகவும் நடித்துள்ளனர். மோகன்லாலுக்கு ஜோடியாக மீனாவும், பிரித்திவிராஜுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் சார்லி, சௌபின், உன்னி மிகுந்தன் என பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பிரித்திவிராஜே இயக்கியுள்ளார். இப்படம் ஜனவரி 26ம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version