சினிமா செய்திகள்

ப்ரோ டாடி ஆகும் மோகன்லால்.. இயக்கும் ப்ரித்விராஜ்!

Published

on

மோகன்லால் நடிப்பில் ப்ரோ டாடி என்ற படத்தை இயக்கி வருகிறார் நடிகர் ப்ரித்விராஜ்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை வைத்து லூஸிஃபர் என்ற மிகப் பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்தவர் நடிகரும், இயக்குனருமான ப்ரித்விராஜ்.

இப்போது மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்ற படத்தை இயக்கி வருகிறார் ப்ரித்விராஜ். கேரளாவில் கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரைப்பட ஷூட்டிங் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜூலை 15-ம் தேதி முதல் ஹைதராபத்தில் படக்குழிவினர் ஷூட்டிங் நடத்தி வருகின்றனர். இந்த படப்பிடிப்பில் மோகன்லால் இன்று முதல் கலந்துகொள்கிறார்.

லூசிஃபர் படம் ஒரு அரசியல், டான் கதையாக உருவாகி இருந்தது. ப்ரோ டாடி ஒரு குடும்ப படமாக இருக்கும் என ப்ரித்விராஜ் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version