இந்தியா

இந்தியாவில் சுற்றுப்பயணத்தை ரத்துசெய்த பிரிட்டன் பிரதமர்!

Published

on

உருமாறிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ்ஜான்சனின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டது.

வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் வெளிநாட்டு தலைவர்கள் பங்குபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு பிரேசில் அதிபரும், அதற்கு முந்தையை ஆண்டில் தென்ஆப்பிரிக்கா அதிபரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அந்த வகையில், இந்தாண்டு நடக்கவிருக்கும் 72வது குடியரசு தின விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட பிரிட்டன் பிரதமர் அலுவலகம், போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதற்கான திட்டங்களை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரிட்டனில் உருமறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டது. இது பற்றி பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள செய்தியின்படி, நோய் தொற்று காரணமாக இந்தியா வரமுடியாதது வருத்தம் அளிக்கின்றது எனவும் இந்த ஆண்டு மத்தியில் கண்டிப்பாக இந்தியா வருவதாகவும் தெரிவித்துதுள்ளார். இதனால் இந்தியா – பிரிட்டன் நல்லுறவிற்கு எந்த பதிப்பும் ஏற்படாது எனவும் இருதரப்பு செய்திகள் கூறியுள்ளன.

போரிஸ் ஜான்சன் வராததால், இந்த வருட குடியரசு தின விழாவில் எந்த நாட்டு தலைவர் பங்கேற்பார் என்பதை பற்றி இன்னும் செய்திகள் வெளியிடப்படவில்லை.

 

 

seithichurul

Trending

Exit mobile version