உலகம்

2 டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள், செலுத்தாதவர்களாகவே கருதப்படுவர்: பிரிட்டன் அறிவிப்பு

Published

on

இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஆகவே கருதப்படுவார்கள் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பதும், தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே வெளிநாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக வளைகுடா நாடுகளில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தாத வெளிநாட்டு பயணிகளை உள்ளே அனுமதிப்பதில்லை என்பதில் பல நாடுகள் தீவிரமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென பிரிட்டன் அரசு இந்தியர்களுக்கு மட்டும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஆகவே கருதப்படுவார்கள் என பிரிட்டன் அரசு புதிய கட்டுப்பாடு விதித்து உள்ளதால் இந்தியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரிட்டன் நாட்டின் பல்கலைகழகங்களில் ஏற்கனவே விண்ணப்பம் செய்து பல்வேறு படிப்புகளில் சேர இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கில் காத்திருக்கின்றனர் என்ற நிலையில் பிரிட்டன் அரசின் இந்த புதிய அறிவிப்பாளர்கள் பிரிட்டன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த புதிய விதி அக்டோபர் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய சுகாதாரத்துறை பிரிட்டன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version