இந்தியா

திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் மணமகனை அடித்து வெளுத்த மணமகள் வீட்டார்: வைரல் வீடியோ!

Published

on

திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் மணமகனை மணமகள் உறவினர்கள் அடித்து வெளுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் என்ற பகுதியில் முஜாமில் என்ற இளைஞருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு இந்த திருமணம் நடைபெற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணமகன், மணமகள் குடும்பத்தாரிடம் 10 லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுத்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் திடீரென சந்தேகம் அடைந்த மணமகள் வீட்டார் அவருடைய பின்னணியை விசாரித்த போது அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனது என்பதும் அதன் புகைப்படங்களும் கிடைத்தன.

இதனால் ஆத்திரமடைந்த மணமகன் குடும்பத்தார் மணமகனை அடித்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோவை இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மணமகள் வீட்டார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணமகனிடம் விசாரணை செய்து வருகின்றனர். திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் மணமகன் மணமகள் வீட்டார் அடித்துக் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://twitter.com/Netaji_bond_/status/1472062894170783744

Trending

Exit mobile version