வைரல் செய்திகள்

டான்ஸ் ஆடியது ஒரு குத்தமா?- திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

Published

on

உத்தரபிரதேச மாநிலத்தில் நடனத்தால் திருமணம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி வைரலாகி வருகிறது.

வரதட்சணையால் திருமணங்கள் நின்ற காலம் போய் தற்போது பல வித காரணங்களுக்காகவும் திருமணங்கள் நின்று போகும் செய்தி நாளுக்கு நாள் வந்து கொண்டிருக்கின்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண விழா ஒன்றில் மாப்பிள்ளை நாகினி நடனம் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார். மாப்பிள்ளைக்குத் துணையாக மாப்பிள்ளைத் தோழர்களும் மேடையில் ஏறி உற்சாக நடனம் ஆடி உள்ளனர்.

அப்போது மாப்பிள்ளை உடன் இணைந்து ஆட மணப்பெண்ணையும் மாப்பிள்ளையின் நண்பர்கள் அழைத்துள்ளனர். முதலில் மணப்பெண் மறுத்துள்ளார். தொடர்ந்து மாப்பிள்ளையும் அவரது நண்பர்களும் உற்சாகத்தில் நடனம் ஆட வற்புறுத்திக் கொண்டே இருந்துள்ளனர். இதில் ‘அப்செட்’ ஆன மணப்பெண் மேடையைவிட்டு இறங்கியுள்ளார்.

இதுபோல் வீட்டுப் பெண்ணை பொது இடத்தில் நடனம் ஆட அழைத்த மாப்பிள்ளையின் குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள முடியாது என ஆத்திரத்தில் ஒட்டுமொத்த மணப்பெண் வீட்டாரும் திருமண விழாவைவிட்டு வெளியேறிவிட்டார்களாம்.

seithichurul

Trending

Exit mobile version