இந்தியா

மணக்கோலத்தில் தம் அடித்து ஸ்டைலாக புகை விட்ட மணமகள்… வைரல் வீடியோ

Published

on

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க முடியாததும் கூட. திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள் அனைவரின் பார்வையும் மணமகள், மணமகன் மீதுதான் இருக்கும். திருமண நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறுவதுண்டு.. இந்த சம்பவங்கள் வீடியோவாக வெளிவந்து பலரையும் ரசிக்க வைப்பதுண்டு.

இந்நிலையில், மணமகள் ஒருவர் உணவருந்தும் இடத்தில் மணமகன் அருகில் இருக்க கையில் சிகரெட்டை பிடித்து ஸ்டைலாக அதுவும் சுருள் சுருளாக புகை வீடியோ வெளியாகி பலரையும் அதிர செய்துள்ளது. இத்தனைக்கும் இதைக்கண்டு மணமகன் கூட இயல்பாக இருப்பதுதான் நமக்கு இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது. உறவினர்கள் அனைவரும் அங்கிருக்கும் நிலையில் அப்பெண் யாருக்கும் பயப்படாமல், தயங்காமல் அவர் புகை பிடித்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் எக்கு தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version