இந்தியா

இது ஒரு பரிசுன்னு கொடுக்குறியா? – மணமேடையில் கடுப்பாகி தூக்கி எறிந்த மணமகள் (வீடியோ)

Published

on

இந்தியாவில் திருமணம் என்றாலே மணமகனின் நண்பர்கள், அல்லது மணப்பெண்ணின் தோழிகள் சில விளையாட்டு மற்றும் குறும்புகளில் ஈடுபடுவார்கள்.

திருமணத்திற்கு வருபவர்களை கவரும் படி பேனர்கள் வைப்பது, வித்தியாசமான பரிசு பொருட்களை கொடுப்பது என கலகலப்பான செயலில் ஈடுபடுவார்கள். சில சமயம் அது எல்லை மீறி என்று மணமகளுக்கோ, மணமகனுக்கோ கோபத்தையும் ஏற்படுத்துவதுண்டு..

மணமகளின் கன்னத்தில் கை வைத்து போட்டோ எடுத்த போட்டோகிராபரை மணமகன் தலையில் தட்டி அவர் கீழே விழுந்து, அதை பார்த்து மணமகள் விழுந்து விழுந்து சிரித்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதேபோல், திருமணத்தில் ஆட்டு கறி போடவில்லை என்பதற்காக கோபமடைந்த மணமகன் மண்டபத்தை விட்டே வெளியேறிய சம்பவம் நடந்தது.

இந்நிலையில், பரிசு பொருளால் மணமேடையில் மணமகள் கோபமடைந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.

மணமகளுக்கு மணமகனின் நண்பர் ஒரு பரிசு பொருளை கொடுத்து பிரித்து பார்க்கும் படி கூற, மணப்பெண் அதை பிரித்து பார்த்தார். அதில் குழந்தைக்கு பால் குடிக்கும் புட்டி இருந்தது. இதைபார்த்து கடுப்பான மணப்பெண் அதை கீழே தூக்கி எறிந்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version