இந்தியா

முதலிரவில் இருந்து திடீரென தப்பித்து ஓடிய மணமகள்: போலீசார் கண்டுபிடித்தபின் கிடைத்த அதிர்ச்சி தகவல்!

Published

on

முதலிரவின் போது மணமகள் திடீரென தப்பித்து சென்ற நிலையில் மணமகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கண்டு பிடித்த போது அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நீண்ட காலம் திருமணமாகாத நிலையில் இளம்பெண் ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார். ஆனால் தனக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் திருமணம் செய்து கொள்வேன் என்று அவர் கூறினார் அதன்பின் 90,000 என பேரம் பேசி பெரியவர்கள் முன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் இரு வீட்டாரும் ஆசீர்வதித்தனர். திருமணத்திற்கு பின்னர் முதலிரவு அறைக்கு சென்ற மணமகள் தனக்கு மிகவும் சோர்வாக இருப்பதாகவும் சிறிது நேரம் மொட்டை மாடியில் காற்று வாங்கிவிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் மொட்டை மாடிக்குச் சென்று அங்கிருந்து பைப் வழியாக இறங்கி தப்பி விட்டதாக தெரிகிறது. இதனை மணமகன் குடும்பத்தார் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணமகளை தேடியபோது அவர் கேப் ஒன்றில் இரண்டு ஆண்களுடன் சென்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை செய்தபோது திருமணமாகாத இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்துக் கொண்டு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி பணம் பறித்து அதன்பின் முதலிரவுக்கு முன் தப்பித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கும்பலாம் மேலும் சிலர் ஏமாந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version