கிரிக்கெட்

கொரோனா 2ம் அலை: இந்தியாவுக்கு பிரட் லீ ரூ.41 லட்சம் நிதியுதவி

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பல உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள், சீனா, ஐக்கிய அரபு எமிரேட், ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு தேவையாஆக்சிஜன், வெண்டிலேட்டர்க்ள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பேட் கம்மின்ஸ் 50,000 டாலர்கள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக நிதி உதவி செய்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்தியாவில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்தியாவுக்கு ரூபாய் 41 லட்சம் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பிரட் லீ நிதி உதவி செய்துள்ளார். இந்தியா எப்போதும் தனக்கு இரண்டாவது வீடாக இருந்து வருகிறது என்றும் கொரோனா தொற்றிலிருந்து இந்திய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது என்றும் விரைவில் இந்தியா மீண்டு வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்காக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீ ரூபாய் 41 லட்சம் கொடுத்ததை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version