கிரிக்கெட்

‘ஆஸ்திரேலியாவுக்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்’- கோலி தம்பதியரை அழைக்கும் ப்ரெட் லீ

Published

on

விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் ஆஸ்திரேலியா மண்ணில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டி அழைக்கிறேன் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஆகிய இருவரும் தங்களது முதல் குழந்தையை வருகிற ஜனவரி மாதம் பெற்றெடுக்க உள்ளனர். இந்த சூழலில் பிரட் லீ ஆஸ்திரேலிய மண்ணுக்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கோலி தம்பதியருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் உங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள். ஆன் குழந்தை பிறந்தால் அருமை. பெண் குழந்தை பிறந்தால் அருமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version