Connect with us

இந்தியா

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்!

Published

on

மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்துதான் கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தனது உத்தரவில் நீதிமன்றம் மேலும் கூறுகையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டேவுக்கு கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நாங்கள் இந்தச் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம். இது வாழ்வா சாவா என்கிற விஷயமாகும். எனவே இந்த சட்டம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக நாங்கள் கவலையுறுகிறோம். எனவே, இந்தப் பிரச்சனையை எங்களுக்குத் தெரிந்த சிறந்த வழியின் மூலம் தீர்க்கப் பார்க்கிறோம். அதன்படி 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதிக்கிறோம். இந்தப் பிரச்சனயை சரி செய்யும் நோக்கிலேயே நாங்கள் வல்லுநர் குழு அமைக்க உள்ளோம். அதற்கு உரிய வல்லுநர்களின் பெயர்களை எங்களிடம் சமர்ப்பியுங்கள். நாங்கள் அது குறித்து முடிவெடுப்போம்’ என்று கூறினார்.

குடியரசு தினமான வரும் ஜனவரி 26 ஆம் தேதி, டெல்லியில் போராடும் விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளதாக எச்சரித்திருந்தனர். இதை நிறுத்தக் கோரியும் விவசாய சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது நீதிமன்றம்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது மத்திய அரசுத் தரப்பு, ‘உரிய ஆலோசனை மற்றும் ஆய்வுகளுக்குப் பின்னர்தான் விவசாய சட்டங்கள் அமல் செய்யப்பட்டன’ என்று வாதாடியது. அந்த வாதத்தை ஏற்காமல் உச்ச நீதிமன்றம், சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது மத்திய அரசுக்கும் போராடும் விவசாயிகளுக்கும் இடையிலான பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள மேலும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இரு தரப்புகளுக்கும் இடையில் நடந்த 8 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியையே தழுவியுள்ளன. அதைக் கணக்கில் கொண்டு உச்ச நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசு சரிவர செயல்படுவதாக நாங்கள் கருதவில்லை. எதாவது ரத்தக் களறி ஏற்படுகிறது என்றால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்?’ என்ற கறார் கேள்வியைக் கேட்டது.

தற்போதைக்கு வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகள் தரப்பு நிம்மதி அடையலாம். அதே நேரத்தில், வல்லுநர் குழு, இந்த விவகாரத்தை எப்படி கையாளும் என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. நீதிமன்றத்தால் அமைக்கப்படும் வல்லுநர் குழு, இரு தரப்பையும் ஒரே மாதிரி நடத்துமா என்கிற சந்தேகங்களும் இப்போதே எழுப்பப்பட்டு வருகின்றன.

 

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!