உலகம்

பாலுறவு வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய அதிபர்!

Published

on

பிரேசில் நாட்டில் கார்னிவல் விழா களைகட்டியுள்ளது. இந்நிலையில் இந்த விழா குறித்தும், ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்தும் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்துள்ளார் பிரேசில் அதிபர் ஜாய்ர் பொல்சனாரூ. மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு ஆண்களின் பாலுறவு காட்சியை பதிவிட்டுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெறும் கார்னிவல் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜாய்ர் பொல்சனாரூ தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குறிய டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். கார்னிவல் விழாவுக்கு வந்த இரண்டு நபர்கள் பாலுறவில் ஈடுபட்ட காட்சியை அதிபர் வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் கார்னிவல் விழாவையும், ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்தும் விமர்சித்தார்.

இதனால் தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆபாச வீடியோவை ஒரு அதிபர் இப்படி பட்டவர்த்தனமாக பதிவிடுவதா? மக்கள் விரும்பும் கார்னிவல் விழாவையும், ஓரினச்சேர்க்கையாளர்களையும் தவறாக பேசுவதா என அவருக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version