உலகம்

உலக அளவில் கொரோனா: இந்தியாவை பின்னுக்கு தள்ளியது பிரேசில்!

Published

on

கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் கொரோனா பாதித்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரேசில் நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனா வைரஸ் மீண்டும் மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதனை அடுத்து உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளையும் எச்சரித்து உள்ளது என்பதும் குறிப்பாக அமெரிக்கா பிரேசில் ஆகிய இரண்டு நாடுகளையும் கடுமையாக எச்சரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் கொரோனாவின் பாத்திப்பு 11,95,93,594 ஆக உயர்வு என்றும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,84,799 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி என்றும் உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள டாப் 10 நாடுகளில் 6 ஐரோப்பாவை சேர்ந்தவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 63,831 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், 1,334 பேர் உயிரிழப்பு என்றும், பிரேசில் நாட்டில் 84,047 பேருக்கு வைரஸ் பாதிப்பு என்றும், 2,152 பேர் உயிரிழப்பு என்றும், பிரான்ஸ் நாட்டில் 25,229 பேருக்கு வைரஸ் பாதிப்பு என்றும், 254 பேர் உயிரிழப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாகவும், நேற்று மட்டும் உலகெங்கும் கொரோனாவால் 9,183 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளில் கொரோனா உயிரிழப்பு அதிகமாக உள்ளது என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

Trending

Exit mobile version