சினிமா செய்திகள்

கும்பமேளாவில் வானத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட பிரம்மாஸ்த்ரா டைட்டில்!

Published

on

ரன்பீர் கபூர், ஆலியாபாட் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பிரம்மாஸ்த்ரா படத்தின் டைட்டில் லோகோ, கும்பமேளாவின் கடைசி நாளில் பல லட்சம் மக்கள் பார்வையிட, வானத்தில் வாண வேடிக்கைகளின் மூலமாக ரிலீஸ் செய்யப்பட்டது.

ஒரு படத்திற்கு புரொமோஷன் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட பிரம்மாஸ்த்ரா படத்தை தயாரித்த ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், படத்தின் தலைப்புக் கேற்ப பிரம்ம அஸ்திரத்தை வானத்தில் வாண வேடிக்கைகளின் வண்ண கோலத்திலே உருவாக்கி ரிலீஸ் செய்துள்ளனர்.

இந்த லோகோ ரிலீஸை கண்டு பாலிவுட் திரையுலகமே ஆச்சர்யத்தில் வாயடைத்து போயுள்ளது.

இயக்குநர் அயன் முகர்ஜி, இயக்கத்தில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பிரம்மாஸ்த்ரா படம் வெளியாகவுள்ளது.

அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பாட், மவுனி ராய் மற்றும் நாகர்ஜுனா என நட்சத்திர பட்டாளத்தில் உருவாகி உள்ள இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version