இந்தியா
#BoycottPatanjali இந்திய அளவில் ட்ரெண்ட்..!- பாபா ராம்தேவ்-க்கு அதிகரிக்கும் எதிர்ப்பு
பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்துக்கு எதிரான #BoycottPatanjali என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
நேபாளம் நாட்டின் நாடாளுமன்றம் சமீபத்தில் வெளியிட்ட திருத்தப்பட்ட நாட்டின் வரைபடத்தில்ல் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின்ன் சில பகுதிகள் இணைக்கப்பட்டு இருந்தன. இதற்கு இந்திய அரசு கண்டனங்களைத் தெரிவித்து இருந்தது. சீன எதிர்ப்பை வெளிப்படுத்த இந்தியர்கள் சீன தயாரிப்புகளை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுத்தனர்.
அதேபோல் நேபாளத் தொடர்பு கொண்ட பதஞ்சலி தயாரிப்புகளையும் ஒழிக்க வேண்டும் என தற்போது சமுக வலைதளங்களில் முழக்கமிடப்பட்டுக் கொண்டுள்ளன. பதஞ்சலி நிறுவனத்தின் சராசரியாக 98 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்கு உரிமைகளைக் கொண்ட பதஞ்சலி சிஇஓ பாலகிருஷ்ணா நேபாளத்தைச் சேர்ந்தவர். இக்குற்றச்சாட்டை நீதிமன்றம் ஒப்புக்கொண்டாலும் பாலகிருஷ்ணா மற்றும் பாபா ராமதேவ் மறுத்து உள்ளனர்.
இவர்கள் மீதான எதிர்ப்பைப் பதியவே பதஞ்சலி தயாரிப்புகளை ஒழிக்க வேண்டும் என #BoycottPatanjali என்ற ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.