இந்தியா

மாஸ்க் போடுங்கள் என கெஞ்சும் சிறுவன்… கண்டுகொள்ளாமல் கடந்து போகும் மக்கள்(வீடியோ)

Published

on

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸின் பாதிப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல ஆயிரம் பேர் இறந்துவிட்டனர். இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் மிகவும் குறைந்துள்ள நிலையில், 3வது அலை விரைவில் துவங்கும் என ஒருபக்கம் பீதியை கிளப்பி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்காமல் தடுக்க மருத்துவர்கள் முதலில் அறிவுரை செய்வது ‘அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்’ என்பதுதான். பல நாட்டின் தலைவர்களும் இதை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இப்போதும் கூட பலரும் முகத்தில் மாஸ்க் அணிவதில்லை. மாஸ்க் அணியாமலே மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதில், அவர்களும் பாதித்து, அவரால் மற்றவர்களும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. இதை பெரும்பாலானோர் உணர்வதே இல்லை.

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா எனும் இடத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு மக்கள் பலரும் மாஸ்க் அணியாமல் நடந்து வருகின்றனர். அவர்களை பார்த்து சிறுவன் ‘எல்லோரும் மாஸ்க் போடுங்கள். ஏன் மாஸ்க் போடவில்லை?’ என கையில் குச்சிபோல் ஒன்றை வைத்துக்கொண்டு அதட்டும் தொனியில் கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘காலில் செருப்பு கூட அணியாத சிறுவன் மாஸ்க் போடுங்கள் என சொல்கிறான்..; இதில் யார் படித்தவர்? யார் படிப்பறிவில்லாதவர்? என பதிவிட்டு வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version