இந்தியா

ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசிகள்: மத்திய அரசுக்கு கோரிக்கை!

Published

on

ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கான அனுமதி தர வேண்டும் என மத்திய அரசுக்கு சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இன்னும் ஒரு சில நாட்களில் அல்லது வாரங்களில் இந்தியாவிலும் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஏற்கனவே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செல்லப்பட்டுள்ள நிலையில் ஒமைக்ரான் வைரஸிலிருந்து பொது மக்களை காப்பாற்ற பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி அனுமதிக்க வேண்டும் என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி இந்திய மக்களை பாதுகாக்கும் என்று நிறுவனம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு இல்லை என்றும் இதனை அடுத்து தற்போது பூஸ்டர் தடுப்பூசி தயாரிப்பதற்கான சூழல் நிலவி வருவதாகவும் அந்த கடிதத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்களுக்கான அமைப்பு ஆஸ்ட்ரா ஜெனிகா என்ற பூஸ்டர் தடுப்பூசிகளை அங்கீகரித்து உள்ளது என்றும் அதே போல் இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் இது குறித்து என்ன முடிவு எடுக்கும் என்பதையும், ஏற்கனவே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் இன்னும் கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு பொதுமக்கள் முன்வருவார்களா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Trending

Exit mobile version