சினிமா செய்திகள்

‘வலிமை’ படத்தின் மாஸ் அப்டேட் தந்த போனிகபூர்!

Published

on

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர்ராஜா இசையில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. ஹாலிவுட்டில் உருவாகும் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இணையாக உருவாகி வரும் ஒரு சூப்பர் ஆக்சன் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட நிறைவடைந்த நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ‘வலிமை’ அப்டேட் குறித்து கடந்த பல மாதங்களாக அஜித் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்தபோது தற்போதுதான் போனி கபூர் அதுகுறித்த ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

இதன்படி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போனிகபூர், ‘‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடையும் என்றும், அதன் பிறகு ஒரே ஒரு ஸ்டன்ட் காட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அஜித் குமார், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இந்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version