சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் படத்தை நான் தயாரிக்கின்றேனா? போனிகபூர் டுவிட்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக இன்று காலை முதல் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியான நிலையில் இந்த செய்தி குறித்து விளக்கமளித்து போனிகபூர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பல ஆண்டுகளாக எனக்கு நெருங்கிய நண்பர். நாங்கள் அடிக்கடி சந்தித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். நாங்கள் இணைந்து ஒரு படத்தை உருவாக்குவது என உறுதி செய்தால் அதை கண்டிப்பாக நான்தான் முதலில் அறிவிப்பேன். எனவே இதுபோன்ற தேவையில்லாத செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்

இதனை அடுத்து போனிகபூர் இப்போதைக்கு ரஜினிகாந்த் படத்தை தயாரிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் எதிர்காலத்தில் அவர் ரஜினிகாந்த் படத்தை தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான ‘தலைவர் 169’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிவுள்ளது என்பதும் நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

Trending

Exit mobile version