சினிமா செய்திகள்

‘வலிமை’ படத்தின் மாஸ் வீடியோவை வெளியிட்ட போனிகபூர்: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

Published

on

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘வலிமை’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ள நிலையில் அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் தயாரிப்பாளர் போனி கபூர் தினந்தோறும் ‘வலிமை’ படத்தின் புரமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சற்று முன்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அஜித்தின் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் வலிமை என்பது அடுத்தவர்களை காப்பாற்றுவதற்காகதான், அழிப்பதற்காக அல்ல, நல்லவன் காப்பாற்றுவான், கெட்டவன் அழிப்பான், முடிஞ்சா தொட்டு பாரு’ என்று அஜீத் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது.

இந்த வசனத்தையும் ஆக்ஷன் காட்சிகளையும் பார்த்து அஜித் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் ‘வலிமை’ திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு முன்னோட்ட விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பும் செய்துள்ளார்கள்.

seithichurul

Trending

Exit mobile version