சினிமா செய்திகள்

ரஜினியின் 170வது படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர்? இயக்குனர் யார் தெரியுமா?

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 168வது திரைப்படமான அண்ணாத்த சமீபத்தில் ரிலீஸ் ஆன நிலையில் அவருடைய 169வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் தெரிந்ததே.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை 3 மாதத்தில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் 170வது திரைப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை தயாரித்தவருமான போனிகபூர் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த கனா என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், போனிகபூர், அருண் ராஜா காமராஜ் இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version