சினிமா செய்திகள்

‘வலிமை’ ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதி செய்த போனிகபூர்!

Published

on

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த படம் திட்டமிட்டபடி வெளிவருமா என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் பலர் கிளப்பி வரும் நிலையில் இது குறித்த அறிவிப்பை போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் உலகின் பல நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் 50 சதவீத பார்வையாளர்கள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’ படம் போலவே ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்படுமா? அல்லது திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் இருந்தது

இந்த நிலையில் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வலிமை’ திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்துள்ளார். இருப்பினும் ஜனவரி 10ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிடும் அறிவிப்பை பொறுத்தே இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version