ஆரோக்கியம்

பம்பாய் ரத்த வகை: 10,000 இந்தியர்களில் வெறும் ஒருவருக்கு மட்டுமே இருக்கும்! முழுவ் விவரம்!

Published

on

பம்பாய் ரத்த வகை என்பது மிகவும் அறிதான ரத்த வகையாகும். இது 1952 ஆம் ஆண்டில் மும்பையில் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ரத்த வகையைக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவில் சுமார் 10,000 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் இருக்கின்றனர்.

பம்பாய் ரத்த வகையின் தனித்தன்மை:

பம்பாய் ரத்த வகையைக் கொண்டவர்களின் சிவப்பணுக்களின் (Red Blood Cells) மேற்பரப்பில் H ஆன்டிஜென் (H Antigen) என்ற ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு இல்லை. இதன் காரணமாக, A அல்லது B ரத்த வகை கொண்ட நபர்களின் ரத்தத்துடன் இணையும் போது குறுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

பொதுவாக, O ரத்த வகையினர் யாருக்கு வேண்டுமானாலும் ரத்தம் கொடுக்க முடியும். ஆனால், பம்பாய் ரத்த வகையை கொண்டவர்களுக்கு O ரத்த வகை கூட பொருந்தாது. ஏனென்றால், அவர்களது உடலில் H ஆன்டிஜென் இல்லாததால், O ரத்த வகையிலும் உள்ள H ஆன்டிஜெனை எதிர்த்து ஆன்டிபாடிகள் (Antibodies) உற்பத்தி செய்யப்படும்.

பம்பாய் ரத்த வகை இருந்தால் என்ன செய்வது?

பம்பாய் ரத்த வகையைக் கொண்டவர்களுக்கு ரத்த தேவைப்பட்டால், அதே ரத்த வகையை கொண்டிருக்கும் ஒரத்தர் தேவை. இது மிகவும் கடினமாக இருக்கும், ஏனெனில் இது மிகவும் அறிதான ரத்த வகை.

குறைந்த நாட்களே சேமிக்க முடியும்

பொதுவாக ரத்தத்தை 42 நாட்கள் வரை சேமித்து வைக்க முடியும். ஆனால், பம்பாய் ரத்த வகையை 40 நாட்களுக்கு மட்டுமே சேமித்து வைக்க முடியும். இதனால், அவசர தேவைக்கு ரத்தம் கிடைப்பது மேலும் சவாலாக இருக்கும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம், தம்பதிகள் தங்களின் ரத்த வகைகளை அறிந்து கொள்ள முடியும் மற்றும் எதிர்காலத்தில் குழந்தை பிறப்பு தொடர்பான சிக்கல்களை தவிர்க்க முடியும்.

பம்பாய் ரத்த வகை என்பது அரிதானது என்றாலும், இது குறித்து விழிப்புணர்வு இருப்பது அவசியம். இந்த தகவல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

Tamilarasu

Trending

Exit mobile version