இந்தியா

புல்வாமாவில் மீண்டும் குண்டுவெடிப்பு: எல்லையில் பதற்றம்!

Published

on

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்போரா என்ற இடத்தில் நேற்று மாலை குண்டுவெடித்துள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் அமைப்பு ஆகும்.

இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்திய விமானி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட போர் பதற்றம் தனிந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் புல்வாமாவில் மீண்டும் நேற்று மாலை குண்டு வெடித்துள்ளது. இதனால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதனால் பாகிஸ்தான் இந்தியா இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்படுமோ என்ற பதற்றம் எல்லையில் ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version