தமிழ்நாடு

சென்னை- காரைக்கால் கடல் வழி படகு சுற்றுலா… ஆர்வம் காட்டுவார்களா மக்கள்?

Published

on

சென்னை முதல் காரைக்கால் வரை பாண்டிச்சேரி மார்க்கமாக கடல் வழி படகுச்சுற்றுலா விரைவில் தொடங்கப்படும் என சென்னை துறைமுகம் அறிவித்துள்ளது.

சென்னை துறைமுகத்திலிருந்து கடலூர், நாகப்பட்டிணம், புதுச்சேரி, காரைக்கால் வரை செல்லும் பயணிகள் படகு போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கப்படும் என சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தனியார் நிறுவனங்களுடன் இந்த சுற்றுலா படகு சேவையை பயணிகளை ஈர்க்கும் வகையில் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிகமான சிறு துறைமுகங்கள் இருப்பதால் இந்தப் படகு போக்குவரத்து சேவைக்கு எளிதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்காக சில துறைமுகங்களில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளை ஆழப்படுத்தும் பணிகளும் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.

சென்னை- காரைக்கால் படகுப் போக்குவரத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற கடற்கரை நகரங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப் பட உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு படகில் ஒரே நேரத்தில் 20 பேர் வரை பயணிக்கும் வகையில் சென்னை- காரைக்கால் படகு போக்குவரத்து சேவை இயங்க உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version