உலகம்

பர்கர் வாங்க கடைக்கு சென்றது ஒரு குற்றமா? பணியில் இருந்து நீக்கப்பட்ட BMW ஊழியர்!

Published

on

பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் பர்கர் வாங்க கடைக்கு சென்றதால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரியான் பார்கின்சன் ஆக்ஸ்போர்டில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் வேலை பார்த்து வந்த ஒருவர் மதிய நேர உணவு இடைவேளையின் போது பர்கர் கிங் கடைக்கு சென்று அவர் பர்கர் வாங்கினார். இதனை அடுத்து அவரது மேலதிகாரிகள் அவர் மீது அனுமதி இல்லாமல் வெளியே சென்றதாக கூறி பணிநீக்கம் செய்தார். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு வேலை கிடைத்தது ஒரு அவருக்கு இழப்பீடாக 16 ஆயிரம் யூரோக்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் நடந்த நிலையில் இது குறித்து விசாரணை கமிட்டியில் விசாரணை நடந்து வந்த நிலையில் தங்களுடைய அனுமதி இல்லாமல் பர்கர் கிங் கடைக்கு சென்றதாகவும் அதனால் அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டார் என்றும் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

ஆனால் ’என் சக ஊழியர்கள் பர்கர் சாப்பிட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்ததால் அனைவருக்கும் பர்கர் வாங்க வேண்டும் என்றும், எனக்கும் சேர்த்து பர்கர் வாங்க வேண்டும் என்றுதான் நான் சென்றேன் என்றும் உணவு இடைவேளையின்போது சென்றதில் தவறு இல்லை என்றும் அந்த ஊழியர் வாதாடினார். இதனை அடுத்து ஊழியருக்கு சாதகமாக ஒழுங்கு விசாரணை குழு தீர்ப்பளித்ததை அடுத்து அவருக்கு மீண்டும் வேலை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version