கிரிக்கெட்

தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளு டிக் குறியீடை நீக்கிய ட்விட்டர் நிறுவனம்!

Published

on

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் ட்விட்டர் கணக்கின் ப்ளு டிக் குறியீடை நீக்கியதால் சமுக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

மகேந்திர சிங் தோனி ட்விட்டர் தளத்தில் தன்னுடைய கணக்கில் 8.2 மில்லியன் பாலோயர்களைக் கொண்டு உள்ளவர். ட்விட்டர் கணக்கில் ப்ளு டிக் வழங்கப்படுவது என்பது அந்தக் கணக்கின் உரிமையாளர் இவர் தான் என்று அதிகாரப்பூர்வமாக ஊர்ஜிதப்படுத்துவதற்கு சமமானது. இந்த சூழலில் திடீரென ட்விட்டர் நிறுவனம் தோனியின் ப்ளு டிக் குறியீடை நீக்கியதால் ட்விட்டரில் ரசிகர்கள் பரபரப்பு விவாதங்களில் ஈடுபடத் தொடங்கினர்.

ஆனால், தோனி தொடர்ச்சியாக ட்விட்டர் கணக்கை பயன்படுத்தவில்லை என்ற காரணத்தால் ப்ளு டிக் குறியீடு நீக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ப்ளு டிக் வாங்கிய ஒருவர் 6 மாதங்களுக்கு மேல் தனது ட்விட்டர் கணக்கைப் பயன்படுத்தவில்லை என்றால் இவ்வாறு குறியீடு நீக்கப்படலாம்.

தோனி கடைசியாகக் கடந்த ஜனவரி மாதம் ஒரு பதிவு செய்துள்ளார். அதன் பின்னர் அவர் ட்விட்டர் பக்கமே வரவில்லை என்பதால் இப்படி ப்ளு டிக் குறியீடு நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version