சினிமா

என்ன பீஸ்ட் வாட வருது! துணிவு படத்தை தூள் தூளாக நொறுக்கிய ப்ளூ சட்டை மாறன்!

Published

on

தல அஜித் குமாரின் துணிவு படத்தின் டிரைலர் அஜித் ரசிகர்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் மற்றும் விஜய் ரசிகர்களுக்கான நியூ இயர் ட்ரீட்டாக மாறி உள்ளது.

பீஸ்ட் பாதி – மணி ஹெய்ஸ்ட் மீதி கலந்து செய்த கலவை நான் என அஜித் குமாரை இந்த முறையும் ஹெச். வினோத் ஏமாற்றி விட்டாரா என நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

எந்த கேப் கிடைக்கும் டிரெண்டிங் ட்ரோல் போடலாம் என காத்துக் கொண்டிருக்கும் ப்ளூ சட்டை மாறன் இந்த ஆண்டின் இறுதி ட்ரோலாக துணிவு படத்தை சும்மா தூள் தூளாக நொறுக்கி ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு விஜய் ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படம் ஒரு மால் செட்டுக்குள்ளே எடுக்கப்பட்டது. அந்த படம் யோகி பாபு நடித்த கூர்கா படத்தின் காப்பி என கலாய்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள துணிவு படத்தின் டிரைலரை ப்ளூ சட்டை மாறன் மரண ட்ரோல் செய்துள்ளார். பீஸ்ட் மால் செட் என்றும் துணிவு பேங்க் செட் என்றும் போட்டு சோலியை முடித்து விட்டார்.

மேலும், இயக்குநர் நெல்சன் ஹெச். வினோத்தை பார்த்து பீஸ்ட் வாட வருது என்பது போல மூக்கைப் பொத்தியபடி போஸ் கொடுக்கும் ட்ரோல் மீமையும் போட்டு வெளுத்து வாங்கி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

இந்த ஆண்டு ஏகப்பட்ட நடிகர்களை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன் ஆண்டு இறுதியில் கூட திருந்த மாட்டார் போல என அஜித் ரசிகர்கள் வழக்கம் போல தீட்டி விட்டு கிளம்பி விட்டனர்.

seithichurul

Trending

Exit mobile version