சினிமா செய்திகள்

உக்காரவே முடியல, கேவலமா இருக்கு: ‘ஆன்டி இந்தியன்’ படத்திற்கு குவியும் நெகட்டிவ் விமர்சனம்!

Published

on

ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ‘ஆன்டி இந்தியன் என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பெரும்பாலானோர் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்து வருவதால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினி, கமல், அஜீத், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை தனது யூடியூபில் கழுவி கழுவி ஊத்திய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ‘ஆன்டி இந்தியன் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்த்தது போலவே நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்த படத்தின் கதை ஓரளவு வலிமையாக இருந்தாலும் டெக்னிக்கல் பக்கம் ரொம்ப வீக்காக இருப்பதாகவும் ஒரு குறும்படம் பார்க்கின்ற உணர்வுதான் இந்த படத்தை பார்க்கும் போது இருப்பதாகவும் நடுநிலை ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்துக்கு எதுக்கு இவ்வளவு பெரிய பில்டப் என்றும் ஒரு மார்க் கூட தேறாது என்றும், ‘ஆன்டி இந்தியன் படம் ஓடிடியில் கூட பார்க்க தகுதியற்ற படம் என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் உட்காரவே முடியவில்லை முழு படத்தையும் பொறுமையாக பார்க்க முடியவில்லை என்றும் கூறிவருகின்றனர்.

ஆனாலும் ஒரு சில நெட்டிசன்கள் படம் சுமாராக இருக்கிறது என்றும் ஒரு தடவை பார்க்கலாம் என்றும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அளிக்கப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை ப்ளூ சட்டை மாறன் தனது டுவிட்டரில் ரீட்வீட் செய்து படத்திற்கு நன்றாக புரமோஷன் பண்ணுங்க என்று சொல்லி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version