இந்தியா

ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ரயில்வே துறை!

Published

on

ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் முக்கிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன என்பதும் ஒரு சில சிறப்பு ரயில்களில் பயணம் செய்த பயணிகளுக்கும் ஏசி பெட்டியில் கம்பளி மற்றும் போர்வை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது என்பது தெரிந்ததே.

இதனை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏசி பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் வீடுகளிலிருந்து போர்வை மற்றும் கம்பளிகளை எடுத்து வர வேண்டிய நிலை இருந்தது .

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து இனிமேல் ரயில்களில் ஏசி பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு போர்வை கம்பெனிகள் வழங்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது .

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2010 மார்ச் 15-ஆம் தேதி முதல் போர்வை, கம்பளி வழங்கப்படுவது நிறுத்தப் பட்ட நிலையில் சரியாக இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் போர்வை கம்பளி ஏசி ரயில் பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version