தமிழ்நாடு

மதுரைக்கு வரும் மோடிக்குக் கருப்புக்கொடி: வலுக்கும் எதிர்ப்பு!

Published

on

பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் என்னுடைய தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ள நிலையில், ஜனவரி 27-ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அரசியல் சட்டத்தின் வரையறைகளுக்கு எதிராக, இட ஒதுக்கீட்டில் வராத ஜாதிகளுக்குப் பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறார்கள்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்க ஜனவரி 27-ஆம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்க மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கிறது என்றார்.

ஏற்கனவே இதே 10 சதவீத இட ஒதுக்கீட்டை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மிழ்நாட்டிற்கு மோடி என்று வந்தாலும் என் தலைமையில் கருப்பு கொடி காட்டப்படும் என கூறியிருந்தார். கடந்த முறை மோடி தமிழகம் வந்த போது அவருக்க கருப்புக்கொடி காட்டப்பட்டு கோ பேக் மோடி என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்ட் ஆக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version