தமிழ்நாடு

பாஜக வானதி சீனிவாசன் வெளியிட்ட தேர்தல் விளம்பரத்தில் மோடி படமே இல்லை- வைத்து செய்த நெட்டிசன்கள்!

Published

on

கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். இதே தொகுதியில் தான் பாஜக மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசம் களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் வானதிக்கும் கமலுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக கமல், கோவை தெற்குத் தொகையை வென்றே ஆக வேண்டும் என்பதால் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் தொகுதியில் பிரச்சாரம் செய்த கமல், ‘பாஜக எதாவது ஒரு தொகுதியலாவது ஜெயிச்சு வந்திடலாம்னுதான் கோவையில வலுவான ஆள நிறுத்தியிருக்காங்க. ஆனா, அவங்களுக்கு எதிரா நான் அங்க நிக்குறேன். என்னோட பாஜக எதிர்ப்பு இதுதான்’ என்று சவால் விட்டுள்ளார். 

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். பல பாஜக தேசியத் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் அவர் தேர்தலையொட்டி வெளியிட்ட விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படமே இடம் பெறவில்லை. இது நெட்டிசன்களின் கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் ஆளாகி வருகிறது. 

seithichurul

Trending

Exit mobile version