தமிழ்நாடு

பாஜகவின் கிளை மேலாளர் அண்ணாமலை: அடித்து ஆடும் அதிமுக!

Published

on

கூட்டணி கட்சிகளான அதிமுக-பாஜக இடையேயான புகைச்சல் முடியாமல் தொடர்ந்து இருந்துகொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தான் ஜெயலலிதா, கருணாநிதியை போன்று ஒரு வலிமையான தலைவர் என அண்ணாமலை அன்மையில் கூறியதற்கு அதிமுகவின் ஐடி விங் அண்ணாமலைக்கு கிளை மேலாளர் என காட்டமான பதிலடியை கொடுத்துள்ளது.

#image_title

அன்மையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் ஒரு தலைவர். நான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். லட்சக்கணக்கான தொண்டர்களின் தலைவன் நான். கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவு எடுக்க வேண்டுமோ? துணிந்து எடுத்துக் கொண்டே இருப்பேன். வரும் காலத்தில் இன்னும் வேகம் அதிகரிக்குமே தவிர குறையாது என்றார்.

இந்நிலையில் இதற்கு எதிர்வினையாற்றியுள்ள அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை சத்யன், மேலாளர் மற்றும் தலைவருக்கும் இடையேயான வேறுபாடு என்பது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1.5 கோடி அதிமுக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் தான் கருணாநிதியும். ஆனால், பாஜகவின் மாநிலத் தலைவர் பொறுப்பு என்பது நாடு தழுவிய கார்ப்பரேட் நிறுவனத்தின் கிளை மேலாளர் பதவிக்கு நிகரானதே எனக் மிக கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள அண்ணாமலையின் நெருங்கிய நண்பரும், பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவரான அமர் பிரசாத் ரெட்டி, தலைவர் என்பவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என்பது முக்கியமல்ல; எப்படி செயல்படுகிறார் என்பதுதான் முக்கியம். நேர்மைக்குச் சொந்தக்காரராகவும்; பித்தலாட்டத்துக்கு துணை போகாதவராகவும் இருக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு, திராவிட இயக்கத்தவர்களின் சான்றிதழ் ஒரு நாளும் தேவையில்லை என்றார்.

Trending

Exit mobile version